”தல படத்துக்கு வசனம் எழுத முடியலையே”-கிரேஸி மோகனின் வருத்தம்

Last Updated: செவ்வாய், 11 ஜூன் 2019 (12:00 IST)
சினிமாத்துறையிலும் நாடகத்துறையிலும் வசனக் கர்த்தாவாகவும் நடிகராகவும் கொடிகட்டி பறந்தவர் கிரேஸி மோகன்.  நேற்று காலை மாரடைப்பு காரணமாக அவர் காலமானார். இச்செய்தி சினிமாத் துறையினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.

இந்நிலையில் கிரேஸி மோகன் பிரபல நடிகர் அஜித்துடன் தன்னால் பணிபுரிய முடியவில்லையே என்று தனது கடைசி காலத்தில் வருத்தப்பட்டதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக கிரேஸி மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் ரஜினி, கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் பணிபுரிந்து வந்துள்ளதாகவும்,  ஆனால்  நடிகர் அஜித்துடன் மட்டும் எனக்கு பணிபுரிய வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் வருத்தப்பட்டதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

மேலும் கிரேஸி மோகன் அவர்கள் தனக்கு நடிகர் அஜித் நடித்த ”ஏகன்” திரைப்படத்தில் வசனம் எழுத வாய்ப்பு கிடைத்ததாகவும்,  ஆனால் அந்த வாய்ப்பு சில காரணங்களால் கை விட்டு போய்விட்டது என்றும் அந்த சமீபத்திய பேட்டியில் வருத்தப்பட்டாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கிரேஸி மோகனின் இந்த சமீபத்திய பேட்டி அஜித் ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :