1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (16:29 IST)

அவர் யாரென்றே எனக்கு தெரியாது - வடிவேல் பாலாஜி குறித்து வனிதா ட்விட்!

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி. இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதி இல்லாததால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மருத்துவமனையிலே இறந்துவிட்டார். அவரது மறைவுக்கு அவரின் சக சின்னத்திரை கலைஞர்கள் அஞ்சலியை செலுத்தினர்.

இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் வடிவேல் பாலாஜியின் மரணம் குறித்து ட்விட் செய்து வனிதாவுக்கு டேக் செய்திருந்தார். அதற்கு ரியாக்ட் செய்த வனிதா," அவர் யார் என்றே எனக்கு தெரியாது.  இதுவரை நான் அவரை பார்த்தது கூட இல்லை. அவர் மிகவும் திறமை வாய்ந்தவர் என்பதை கேள்விப்பட்டு மனம் வருந்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இருந்தும் இவ்வளவு பிரபமான நடிகரை வனிதா தனக்கு யாரென்றே தெரியாது என கூறியிருப்பது ரசிகர்களை கோபத்திற்குள்ளாக்கியுள்ளது.