Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இன்னொரு பாகுபலியா? நான் செத்தே போய்விடுவேன். பிரபாஸ்


sivalingam| Last Modified வியாழன், 20 ஏப்ரல் 2017 (05:31 IST)
உலகமே ஒரு இந்திய படத்திற்கு எதிர்பார்த்து காத்திருக்கின்றது என்றால் அது வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ள 'பாகுபலி' திரைப்படம் தான் என்பதில் சந்தேகம் இல்லை.


 


இந்த படத்தின் இரண்டு பாகங்களுக்காக சுமார் நான்கு வருடங்கள் வேறு படங்களில் ஒப்புக்கொள்ளாமல் நடித்த பிரபாஸின் தியாகம்தான் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்திற்காக அவருக்கு பத்து படத்தின் சம்பளம் கொடுக்கப்பட்டது என்பது வேறு விஷயம்

இந்த நிலையில் 'பாகுபலி' போன்று இன்னொரு படத்தை ராஜமெளலியே எடுக்க முன்வந்தாலும் நடிக்க மாட்டேன் என்றும், பாகுபலி குறித்தே எந்த நேரமும் கடந்த நான்கு ஆண்டுகளாக நினைத்து கொண்டிருப்பதாகவும் கூறிய பிரபாஸ் இப்போதுதான் அந்த படத்தில் இருந்து வெளியே வந்து ரிலாக்ஸ் ஆக இருப்பதாக கூறினார்.

மேலும் இன்னொரு பாகுபலி படத்தின் நடித்தால் நான் செத்தே போய்விடுவேன் என்றும் இந்த படத்தில் கிடைத்த புகழே எனக்கு போதும் என்றும் அவர் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :