வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 28 ஜூலை 2016 (20:33 IST)

’வலியோடு இருக்க நான் ஆண்ட பரம்பரை கிடையாது’ - ரஞ்சித்

நான் ஆண்ட பரம்பரை இல்லை. அதெல்லாம் இழக்கிறதா இருந்தா தான், அய்யய்யோ இதெல்லாம் இழக்குறேனேன்னு வலியோட இருக்கணும் என்று இயக்குநர் ரஞ்சித் கூறியுள்ளார்.
 

 
கபாலி திரைப்படம் குறித்து தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
கேள்வி: உங்களோட அடுத்த ப்ராஜெக்ட்ல இதே சாயல் இருக்குமா? நீங்க சினிமாவுக்குள் காலடி எடுத்து வெச்ச நாள்ல ரஜினியை இயக்குவோம் என்கிற எதிர்பார்ப்போட வந்தீங்களான்னு எனக்கு தெரியாது. இப்போ அந்த கட்டத்தை தாண்டி இருக்கீங்க. இப்போ அதே வேகம், அதே மாதிரியான உணர்வு, அதே மாதிரியான தாகத்தோடு தொடர்வீர்கள் என்று சொல்லலாமா?
 
ரஞ்சித்: ஆமாமா! இன்னைக்கி வரைக்கும் ரோஹித் வெமுலாக்கள் தற்கொலை செய்கிற வரைக்கும் அது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். பிஎச்.டி ஸ்காலர் செத்துட்டான்ல. ஏன் சாகனும்? எவ்வளவு பெரிய வலி அது?
 
ஒரு வாரத்துக்கு முன்னாடி குஜராத்துல மாட்டு தோலை எடுத்து போனதுக்காக அஞ்சு தலித்துகளை அடிச்சி இருக்காங்க. மிகப்பெரிய எழுச்சி அங்கே உண்டாகி இருக்கு. இது நிக்கிறதே கிடையாது. இது நிக்கிற வரைக்கும் நாம இத பத்தி பேசிட்டு தான் இருக்கனும்.
 
அதுக்கு அப்புறம் ஒண்ணே ஒன்னு சொல்லிக்கணும். நான் எதையும் கைல கொண்டு வரல. எனக்கு மிகப்பெரிய பாரம்பரியமோ, கலாச்சாரமோ, நான் வந்து ஆண்ட பரம்பரையா அதெல்லாம் ஒண்ணுமே இல்ல. அதெல்லாம் இழக்கிறதா இருந்தா தான் அய்யய்யோ இதெல்லாம் இழக்குறேனேன்னு வலியோட இருக்கணும். எனக்கு அதெல்லாம் ஒண்ணுமே கிடையாது.
 
என்னுடைய ஒரே ஆயுதம் நான் மட்டும் தான். என்னுடைய உடம்பு தான் என்னுடைய கருவி. என் உடல் ஒத்துழைக்கும் வரை நான் இந்த சமூகத்துக்காக, சமூக மாற்றத்திற்காக என்னால் முடிந்ததை பேசுவேன். என் படைப்புகள் பேசும். இது தான் நான்.