“மகேந்திரன் சார் படங்கள்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்” – பாலாஜி தரணீதரன்

Balaji Tharaneetharan
cauveri manickam| Last Modified வியாழன், 12 அக்டோபர் 2017 (13:25 IST)
‘மகேந்திரன் சார் படங்கள்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்’ எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் பாலாஜி தரணீதரன். 
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலாஜி தரணீதரன். அடுத்ததாக, ‘ஒரு பக்க கதை’ என்ற படத்தை இயக்கினார். ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம், முதன்முதலில் இந்தப் படத்தில்தான் அறிமுகமானார். ஹீரோயின் மேகா ஆகாஷுக்கும் இதுதான் முதல் படம்.

ஆனால், படம் தயாராகி பல வருடங்கள் ஆகியும், ரிலீஸ் ஆகவில்லை. இப்போதுதான் எல்லா பிரச்னைகளும் முடிந்து ரிலீஸ் ஆகப் போகிறது. “நான் மகேந்திரன் சாரின் படங்களைப் பார்த்து வளர்ந்தவன். அதனால், இயல்பாகவே அவரின் தாக்கம் என் ஸ்கிரிப்ட்டில் இருக்கும்” என்கிறார் பாலாஜி தரணீதரன். இவர் தற்போது மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து ‘சீதக்காதி’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :