நான் என்னென்னைக்கும் ரஹ்மானுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்: இயக்குநர் ஷங்கர் கண்ணீர் பேட்டி

Sasikala| Last Modified வெள்ளி, 16 ஜூன் 2017 (17:11 IST)
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ‘எந்திரன்’ படப்பிடிப்பின் போது இயக்குனர் ஷங்கருக்கு செய்த உதவியை கண்ணீர் மல்க  கூறியதாவது, ‘நான் சந்தித்தவர்களிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் மிகக் கடின உழைப்பாளி. இன்னொரு பக்கம் அவர் ஒரு மிகச்  சிறந்த மனித நேயம் கொண்டவர் என கூறியுள்ளார்.

 
என்னுடைய மகன் அர்ஜித் பிறந்தது முதல் அவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு குணப்படுத்த முடியாமல் கஷ்டப்பட்டேன். வாரம் ஒரு தடவையாவது அவனை டாக்டர்கிட்ட அழைச்சிக்கிட்டுப் போக வேண்டி வரும். ஆறு வயசுலயே எல்லா டாக்டர்களும் மருந்துகளும் அவனுக்கு அத்துப்படி.
 
இந்த விஷயத்தைக் அறிந்த ஏ.ஆர்.ரஹ்மான், ‘ஷங்கருக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ... பையனை அழைச்சுக்கிட்டு  மவுண்ட் ரோட்டில் உள்ள தர்ஹாவுக்கு வரச் சொல்லுங்க’னு அவர் மனைவி மூலமா என் மனைவிகிட்ட சொல்லியுள்ளார். நானும் பையனுக்குச் சரியானாப் போதும்னு போயிருந்தேன். 
 
அங்கு ரஹ்மானே அவங்க அம்மாவோட தர்ஹாவுக்கு வந்திருந்தார். என் பையனுக்காக அரை மணி நேரம் ப்ரேயர் பண்ணி மந்திரிச்சுக் கயிறு கட்டினாங்க. ரஹ்மான் எவ்வளவு பிஸியானவர்? இருந்தும் எல்லாத்தையும் விட்டுட்டு, ஒரு மிகச்  சிறந்த மனித நேயத்துடன் சில மணி நேரங்களை என் மகன் அர்ஜித்துக்காகச் செலவழிச்சார். ஆச்சரியம் என்னவென்றால் இரண்டு, மூன்று நாட்களிலேயே என் மகனுக்கு இருந்த எல்லாத் தொல்லைகளும் நீங்கி நல்லபடியா ஆகிட்டான். ‘எப்படி இது  சாத்தியம்னு நான் எந்த ஆராய்ச்சிக்கும் போகலை. பையன் நல்லாகிட்டான். நான் என்னன்னைக்கும் ரஹ்மானுக்கு  நன்றிக்கடன்பட்டுள்ளேன் என்று கூறினார் இயக்குனர் ஷங்கர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :