வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : புதன், 15 ஏப்ரல் 2015 (13:18 IST)

ஹிர்த்திக் ரோஷனை இயக்கும் முருகதாஸ்...?

இந்தியில் அகிரா படத்தை இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து ஹிர்த்திக் ரோஷன் நடிக்கும் இந்திப் படத்தை இயக்குவதாக உறுதி செய்யப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
 

 
தமிழில் சாந்தகுமார் இயக்கிய மௌனகுரு படத்தின் இந்தி ரீமேக், அகிரா. அருள்நிதி நடித்த வேடத்தை இந்தியில் சோனாக்ஷி சின்கா செய்கிறார். இந்தப் படம் முடிந்த பின் முருகதாஸ் மீண்டும் ஒரு இந்திப் படத்தை இயக்குவதாகவும், ஹிர்த்திக் ரோஷன் அதில் நடிக்க உள்ளதாகவும், ஹீரோயினாக அனேகமாக ஸ்ருதி நடிக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்த செய்தியை இரு தரப்பும் இன்னும் உறுதி செய்யவில்லை.