1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 25 ஜூலை 2015 (14:26 IST)

பேய் படம் டெய்சியின் பெயர் மாறியது

ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் தயாராகியுள்ள பேய் படம், டெய்சி. வழக்கமான பேய் படங்கள் போலில்லை எங்களுடைய படம். தந்தைக்கும் மகளுக்கும் உள்ள உறவை வித்தியாசமான முறையில் சொல்லும் படம் என்று பேட்டிக்கு பேட்டி கூறி வருகிறார். 
 
படத்தில் வரும் மகள் (சிறுமியின்) பெயர் டெய்சி. அதையே பெயராக வைத்திருந்தனர். தற்போது அதனை, உனக்கென்ன வேணும் சொல்லு என்று மாற்றியுள்ளனர். எங்கேயோ கேட்ட பெயராக இருக்கிறதா?
 
என்னை அறிந்தால் படத்தில் சிறுமியையும் அழைத்துக் கொண்டு அஜித் ஊர் சுற்றும் போது வரும் பாடலின் முதல்வரிதான் இது. டெய்சி கதைக்கு டெய்சியைவிட, உனக்கென்ன வேணும் சொல்லு என்பதே பொருத்தமாக இருப்பதாக அனைவரும் சொன்னதால் படத்தின் பெயரை மாற்றியதாக கூறினார், ஸ்ரீநாத் ராமலிங்கம்.
 
இதுவும் நன்றாகதான் இருக்கிறது.