1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 10 டிசம்பர் 2016 (12:55 IST)

ஹிட்டடித்த சிரஞ்சீவியின் டீஸர்

நேற்று சிரஞ்சீவியின் கைதி நம்பர் 150 படத்தின் டீஸர் வெளியானது. அதிரடி காட்சிகள் நிறைந்த இந்த டீஸர் இன்ஸ்டன்ட் ஹிட்டாகியுள்ளது.

 
கத்தி படத்தைதான் கைதி நம்பர் 150 என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். சிரஞ்சீவியின் 150 -வது படமான இதற்கு பெருத்த எதிர்பார்ப்பு உள்ளது. விவி விநாயக் படத்தை இயக்கி, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். காஜல் அகர்வால் நாயகி.
 
இதன் டீஸர் நேற்று வெளியிடப்பட்டது. ஆக்ஷன், பன்ச் டயலாக்குடன் வெளியான டீஸரை ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகின்றனர். படம் மீதான எதிர்பார்ப்பை டீஸர் அதிகரித்துள்ளது.