1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 28 மே 2015 (13:04 IST)

இந்தியில் மங்காத்தாவை ரீமேக் செய்யும் ஸ்டுடியோ கிரீன்

வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த மங்காத்தா ஒரு சர்வதேச சப்ஜெக்ட். சிறிது மாற்றி எந்த மொழியில் வேண்டுமானாலும் எடுக்கலாம். இந்தியில் மங்காத்தாவை ரீமேக் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
மங்காத்தாவின் இந்தி ரீமேக் குறித்து சைப் அலிகான், ஜான் ஆபிரஹாம் ஆகியோருடன் வெங்கட்பிரபு பேச்சுவார்த்தை நடத்தினார். சில காரணங்கள், புராஜெக்ட் டேக் ஆஃப் ஆகவில்லை.
மங்காத்தாவின் இந்தி ரீமேக் உரிமை ஸ்டுடியோ கிரீனிடம் உள்ளது. தமிழகத்திலிருந்து தனியாகச் சென்றால் இருட்டடிப்பு செய்தே காலி செய்துவிடுவார்கள் என்பதால் இந்தியின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இந்த ரீமேக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
 
வெங்கட்பிரபு தனது அடுத்தப் படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதனுக்காக இயக்குகிறார். அதனால் மங்காத்தா இந்தி ரீமேக்கை அவர் இயக்குவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.