Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பெரிய ஹீரோக்களை ஒதுக்கி சினிமாவில் வித்தியாசம் காட்டும் கதாநாயகிகள்!!


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 10 ஜனவரி 2017 (17:03 IST)
தற்போது முன்னணி கதாநாயகிகள் தங்களுக்கும் கதாநாயகர்களுக்கு இணையாக கதைகளில் முக்கியத்துவம் வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். 

 
 
புதுமுக நடிகர்கள் படங்களில் தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் கூட அவர்களுடன் நடிக்க தாராளமாக ஒப்புக்கொள்கிறார்கள்.
 
இப்படி பெரிய கதாநாயகர்களை ஒதுக்கி விட்டு தங்கள் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடிப்பிடித்து நடிக்கும் நடிகைகளின் பட்டியல் இதோ...
 
நயன்தாரா:
 
# மாயா படத்தில் பேயாகவும், நானும் ரவுடிதான் படத்தில் காது கேட்காத பெண்ணாகவும் தனது நடிப்பு திறமையை வெளிபடுத்தினார். 
 
# தற்போது டோரா, இமைக்கா நொடிகள், கொலையுதிர்காலம் ஆகிய திகில் படங்களில் நடித்து வருகிறார். 
 
# அறம் என்ற படத்தில் துணிச்சலான கலெக்டர் வேடம் ஏற்றுள்ளார். 
 
அனுஷ்கா:
 
# அருந்ததி படத்திலேயே தனது திறமையை வெளிப்படுத்தினார் அனுஷ்கா. இஞ்சி இடுப்பழகியில் உடல் எடையை மேலும் இருபது கிலோ கூட்டி நடித்தார்.
 
# ருத்ரமாதேவி, பாகுபலி படங்களில் வாள் வீசி ஆண்களுக்கு இணையாக நடித்து அசத்தினார். 
 
# தற்போது திருப்பதி வெங்கடேச பெருமாள் மகிமைகளை மையப்படுத்தி தயாராகும் ‘ஓம்நமோ வெங்கடேசாய’ படத்தில் கிருஷ்ணம்மா என்ற பெண் பக்தை வேடத்தில் வருகிறார். 
 
# பாகுபலி இரண்டாம் பாகத்தில் ராணியாக நடிக்கிறார்.
 
திரிஷா:
 
# கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்படும் மோகினி என்ற திகில் படத்திலும், சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். 
 
# அடுத்து மும்பை தாஜ் ஓட்டலில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலை மையப்படுத்தி உருவாகும் ‘1818’ என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் பயங்கரவாதிகளுடன் ஆக்ரோஷமாக மோதி மக்களை மீட்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
 
ஸ்ரேயா:
 
# கவுதமி புத்ர சதாகர்னி என்ற படத்தில் ராணி வேடத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார் ஸ்ரேயா. 


இதில் மேலும் படிக்கவும் :