Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஹார்லி டேவிட்சன் பைக்கில் பறக்கும் ஆண்ட்ரியா

Cauveri Manickam| Last Modified புதன், 19 ஏப்ரல் 2017 (13:33 IST)
ஹார்லி டேவிட்சன் பைக்கில் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ள ஆண்ட்ரியாவின் புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது.

 
 
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா நடித்துவரும் படம் ‘துப்பறிவாளன்’. இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ஆண்ட்ரியா. படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், ஆண்ட்ரியாவுக்காக படப்பிடிப்பைத் தள்ளி  வைத்துள்ளனர். ஏன்? 
 
கதைப்படி, ஆண்ட்ரியா ஹார்லி டேவிட்சன் பைக் ஓட்ட வேண்டுமாம். ஆனால், அவருக்கு ஓட்டத் தெரியாது என்பதால்  பயந்திருக்கிறார். எல்லாமே தத்ரூபமாக வரவேண்டும் என்று எதிர்பார்க்கும் மிஷ்கின், பைக் ஓட்ட கற்றுக்கொள்ளும்படி  சொல்லிவிட்டு ஷூட்டிங்கைத் தள்ளிவைத்து விட்டாராம். அதனால், தீவிரமாக அந்த பைக்கை ஓட்ட கற்று வருகிறார்  ஆண்ட்ரியா. 
 
இந்தப் படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர், அக்‌ஷரா ஹாசன். ஆனால், அவர் அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் நடிக்கச்  சென்றுவிட்டதால், ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :