வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : புதன், 22 பிப்ரவரி 2017 (17:19 IST)

ஹரிஷ்சந்திரா படத்தின் இயக்குநர் மரணம்

103 வயது பழம்பெரும் தமிழ் இயக்குநர் ஆண்டனி மித்ரதாஸ் நேற்று சென்னயில் காலமானார்.


 

 
1913 ஆம் ஆண்டு மதுறையில் பிறந்த ஆண்டனி மித்ரதாஸ், அமெரிக்கன் கல்லூரியில் பயின்று சினிமா மீது ஆசை ஏற்பட்டு கொல்கத்தா சென்று திரைப்பட கல்லூரியில் பயின்றார். 1941 ஆம் ஆண்டு தயாளன் என்ற படத்தை இயக்கினார். அதுவே அவருக்கு முதல் திரைப்படம்.
 
தியாகராஜ பாகவதர், பியு சின்னப்பா, டிஆர் மகாலிங்கம் போன்ற பழம் பெரும் கலைஞர்களை இயக்கிய, தமிழின் மூத்த இயக்குநர் ஆன்டனி மித்ரதாஸ்.
 
இவர் தமிழ், மலையாளம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார். இதுவரை இவர் 7 படங்கள் இயக்கியுள்ளார். 1960 ஆம் ஆண்டு சிவகாமி என்ற திரைப்படம்தான் இவர் கடைசியாக இயக்கிய திரைப்படம்.
 
ஹரிஷ்சந்திரா படத்தை பற்றி அறியாதவர் இந்தியாவில் எவரும் இல்லை. இந்த புகழ்பெற்ற படத்தை இயக்கிவர் ஆண்டனி மித்ரதாஸ். 103 வயதை கடந்த இவர் நேற்று சென்னையில் காலமானார்.