பிக் பாஸ் ஸ்ரீ இப்படி பட்டவரா? உண்மையை உடைத்த நண்பர்!!


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (19:03 IST)
நடிகர் ஸ்ரீ பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பின்னர் உடல் நல பிரச்சனை காரணமாக முதல் வார முடிவிலேயே வீட்டை விட்டு வெளியேறினார்.

 
 
பிக் பாஸ் வீட்டில் நுழைந்தது முதல் ஸ்ரீ யாரிடமும் சரியாக பேசாமல் தனியாகவே இருந்து வந்தார். மற்ற போட்டியாளர்கள் பேச முயன்றும் அவர் சரியாக யாரிடமும் பழகவில்லை.
 
இந்நிலையில், ஸ்ரீ பற்றிய உண்மையை அவரது நண்பரும் நடிகருமான ஹரிஷ் கல்யாண் கூறியுள்ளார். இவர்கள் இருவரும் வில் அம்பு படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஹரிஷ் கல்யாண் கூறியதாவது, ஸ்ரீ மிகவும் ஜாலியானவர். பிக் பாஸ் வீட்டிற்கு என்ன நினைத்து அவர் போனார், அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவர் மூளைக்கு யாரோ ஏதோ செய்துவிட்டார்கள் போல. படப்பிடிப்பிலும் சரி, வெளியிலும் சரி அவர் மிகவும் ஜாலியான ஒரு மனிதர்தான் என்று கூறியுள்ளார்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :