வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 18 நவம்பர் 2014 (09:25 IST)

காதலர் தினத்தில் வெளிவரும் ஹன்சிகாவின் காதல் படம்

ஹன்சிகா, சிம்பு நடித்துள்ள வாலு படம் முடிந்துவிட்டது. ஆனால் படம் எப்போது வெளிவரும் என்று தெரியவில்லை. அதற்காக ஹன்சிகா கவலைப்பட்டது போலவும் இல்லை. பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று அவரது படம் ஒன்று இப்போதே கர்ச்சீப் போட்டு காத்திருக்கிறது. 
 
அப்படம், உயிரே உயிரே. தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற இஷ்க் படத்தை தமிழில் உயிரே உயிரே என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் ராஜசேகர். இவர் விஷால் நடித்த சத்யம் படத்தை இயக்கியவர். உயிரே உயிரேயில் ஹன்சிகாவுடன் நடித்திருப்பவர் சித்து என்ற புதுமுகம்.
 
முன்னணி நாயகர்களுடன் நடித்துவரும் ஹன்சிகா புதுமுகத்துடன் நடிக்க காரணம், சித்து நடிகர் ஜெயப்ரதாவின் மகன். ஜெயப்ரதாவுக்காக இந்தப் படத்தை விருப்பத்துடன் ஒப்புக் கொண்டார்.
 
காதல் படம் என்பதால் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று படத்தை வெளியிடுகிறோம் என்றார் ராஜசேகர்.