வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 28 ஜூலை 2015 (16:07 IST)

புரூஸ்லீயாக பெயர் மாறிய பாட்ஷா என்கிற ஆண்டனி

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்துக்கு, பாட்ஷா என்கிற ஆண்டனி என்று பெயர் வைத்திருந்தனர். இந்த பெயர் காரணமாக, அறிவித்த அடுத்த நிமிடமே இந்தப் பெயர் பிரபலமானது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தப் பெயரை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பழைய படத்தின் பெயரை பயன்படுத்துவதென்றால், அப்படத்தை தயாரித்தவர்களின் அனுமதியை பெற வேண்டும். பாட்ஷா படத்தை தயாரித்தவர்கள் பாட்ஷாவின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருப்பதால், பாட்ஷா என்கிற ஆண்டனி என்ற பெயரை பயன்படுத்த அனுமதி அளிக்கவில்லை. அதனால் படத்தின் பெயரை புரூஸ்லி என மாற்றியுள்ளனர்.
 
இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷின் பெயர், புரூஸ்லீ. அதனால் அதையே  படத்தின் பெயராக்கியதாக படத்தின் இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் தெரிவித்தார்.