1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: சனி, 6 மே 2017 (12:27 IST)

தெலுங்குப்பட ரீமேக்கில் ஜி.வி.பிரகாஷ்

நாக சைதன்யா நடித்த தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் ஜி.வி. பிரகாஷ்.


 

நாகசைதன்யா, தமன்னா நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான தெலுங்குப் படம் ‘100 பர்சண்டேஜ் லவ்’. சுகுமார் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தை, தமிழில் ரீமேக் செய்யப் போகிறார்கள். ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் நடிப்பதுடன், இசையையும் அவரே கவனித்துக் கொள்கிறார்.

தெலுங்குப் படத்தை எடுத்த சுகுமார், இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் என்பது கூடுதல் விஷயம். சந்திரமெளலி படத்தை இயக்குகிறார். முழுக்க முழுக்க லண்டனில் தான் கதை நிகழ்வதால், ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் அங்கேயே நடைபெறுகிறது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் – நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. அது முடிந்ததும், ஷூட்டிங்குக்காக லண்டன் கிளம்புகின்றனர்.