வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 26 மே 2016 (13:34 IST)

டுடே - ஆச்சிக்கு பர்த்டே

டுடே - ஆச்சிக்கு பர்த்டே

தமிழக மக்களை தனது நகைச்சுவையால் கட்டிப்போட்ட ஆச்சி மனோரமாவுக்கு இன்று பிறந்த நாள் ஆகும்.
 

 
கடந்த 1939 ஆம் ஆண்டு ராஜமன்னார்குடியில்  காசிகிளாக்குடையார் - ராமாமிர்தம்மாள் தம்பதிகளுக்கு மகளாக பிறந்த கோவிந்தம்மாள், 1952 ஆம் ஆண்டு  யார் மகன் என்ற மேடை நாடகம் மூலம் தனது நாடகபயணத்தை தொடங்கி, அறிஞர் அண்ணா எழுதிய வேலைக்காரி, திமுக தலைவர் கருணாநிதி எழுதிய உதயசூரியன் உள்ளிட்ட  சுமார் 5000 நாடகங்களில் நடித்து புகழ் பெற்றார்.
 
மாலையிட்ட மங்கை திரைப்படம் மூலம் சினிமா  உலகில் காலெடி எடுத்துவைத்த மனோராமா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளில் 1,300 படங்களுக்கு மேல்- நடித்து திரையுலகிலும் சாதனை படைத்தார். மேலும், கின்னஸ் உலக சாதனையாளர் பட்டியலிலிலும் இடம் பிடித்தார்.
 
தில்லானா மோகனாம்பாள் படம் மூலம் ஜில்லுவாக வலம் வந்தவர் மக்கள் மனதிலும் ஜில்-ன்னு இடம் பிடித்துவிட்டார். அவர் மறைந்தாலும் அவர் நினைவுகள் மறையவில்லை. இவர் நம்மிடம் இல்லை என்றாலும்கூட வஞ்சனை இன்றி வாழ்த்துவோம். அந்த வாழ்த்துக்கள் மேககூட்டத்தை கிழித்துக் கொண்டு சொர்கலோகத்தில் போய் சொல்லட்டும் தமிழக மக்களின் அன்பை.