வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 30 ஜூன் 2017 (11:45 IST)

ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஜூலை 1 முதல் சினிமா டிக்கெட் விலை உயர்வு

சரக்கு மற்றும் சேவை வரியின் சுருக்கமே ஜிஎஸ்டி. நாடு முழுவதும் ஒரே சீரான வரியை விதிப்பதற்காக, சரக்கு-சேவை வரிச்  சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

 
மத்திய அரசின் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பில், சினிமாவுக்கு 28% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா டிக்கெட் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது. இதனால் ஜூலை 1 முதல் தமிழக திரயரங்குகளில் டிக்கெட் கட்டணம் உயரவிருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த வரி விதிப்புக்குத் திரைத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 
 
ரூ.100க்கு குறைவாக உள்ள டிக்கெட்களுக்கு ஜிஎஸ்டி 18% என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் 30% நகராட்சி வரி  செலுத்திவருகிறது. அவை ரத்தானால் மட்டுமே இந்த விலைக்கு டிக்கெட்டுகள் விற்கமுடியும் என்று திரையரங்கு அதிபர்கள் கூறியுள்ளார்கள். மற்ற மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா இந்த வரியை ரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.