பச்சை பச்சையா டயலாக் பேசி சம்பாதிக்கும் பச்சை நிறுவனம்


cauveri manickam| Last Modified வெள்ளி, 6 அக்டோபர் 2017 (18:21 IST)
அடல்ட்ஸ் ஒன்லி படங்களாக எடுத்து எக்கச்சக்கமாக சம்பாதித்து வருகிறதாம் பச்சை நிறுவனம்.
 


 

சில வருடங்களுக்கு முன்பு, இரண்டு நடிகைகளின் பெயரைத் தலைப்பாகக் கொண்டு ஒரு படம் வெளிவந்தது. ஏகப்பட்ட இரட்டை அர்த்த வசனங்கள் நிரம்பிய அந்தப் படத்தைக் கழுவி ஊற்றாதவர்கள் இல்லை. ஆனால், அந்தப் படத்துக்கு அவ்வளவு கலெக்ஷன். அந்தப் படத்தை, பச்சை தயாரிப்பு நிறுவனம்தான் ரிலீஸ் செய்தது.

கடந்த வாரம், இரட்டை அர்த்த வசனங்கள் கூட இல்லாமல் நேரடியாகப் பேசும் ஒரு படம் வெளியானது. ‘படம் நல்லா இல்லை’ என்று சொன்னாலும், அந்தப் படத்துடன் வெளியான விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’, மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடர்’ படங்களைவிட, அந்தப் படத்துக்குத்தான் நிறைய கலெக்ஷன். இந்தப் படத்தையும், பச்சை நிறுவனம்தான் தயாரித்திருந்தது.  இதுபோன்ற படங்களில் குறைந்த செலவில் நிறைய லாபம் சம்பாதிக்க முடிகிறது என்பதால், வருடத்திற்கு ஒரு படம் இந்த மாதிரி எடுக்க முடிவு செய்துள்ளதாம் பச்சை தயாரிப்பு நிறுவனம்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :