ப.பாண்டி அடுத்த பாகம்? - தனுஷிற்கு கௌதம் மேனன் கோரிக்கை


Murugan| Last Updated: வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (16:48 IST)
ப.பாண்டி படத்தின் தொடர்ச்சியை நீங்கள் மீண்டும் இயக்க வேண்டும் என நடிகர் மற்றும் இயக்குனர் தனுஷிற்கு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கோரிக்கை வைத்துள்ளார்.

 

 
நடிகர், பாடகர், பாடலாசிரியர் மற்றும்  தயாரிப்பாளர் என பல முகம் காட்டிய தனுஷ், பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்தார். ராஜ்கிரனை ஹீரோவாக வைத்து அவர் இயக்கி அந்த படம் கேளிக்கை வரிக்காக ப. பாண்டி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த படம் வெளியாகி வியாபார ரீதியாக நல்ல வசூலையும், விமர்சன ரீதியாகவும் நேர்மறையான கருத்துகளையும் பெற்றுள்ளது.
 
மேலும், தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் பலரும் தனுஷின் இயக்கம் குறித்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் கௌதம் மேனன் “இயக்குனர்களின் குடும்பத்தில் இணைந்துள்ள தனுஷை வரவேற்கிறேன். ப.பாண்டி தைரியமான முயற்சி. பெற்றோர்களும், குழந்தைகளும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.  தனுஷ்... இந்த படத்தின் அடுத்த பாகத்தை எடுங்கள்.. பாண்டிக்கும், பூந்தென்றல் ஆகியோரின் வாழ்வில் அடுத்த என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளர்.
 
கௌதம் மேனனின் ஆசையை நிறைவேற்றுவாரா தனுஷ்?

webdunia

இதில் மேலும் படிக்கவும் :