வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2015 (16:55 IST)

ஒத்த பாட்டுக்கு ஒண்ணரை கோடி

பிரமாண்ட இயக்குனரின் ப்ரெண்ட் படத்தில் நடித்த கொடியிடை நடிகைக்கு தமிழ், தெலுங்கில் படங்களில்லை. இந்தியில் ஏதோ சுமாராக வண்டி போய்க் கொண்டிருக்கிறது. சரியாகச் சொன்னால் அங்கேயும் ரிட்டையர்ட்மெண்ட் நிலைதான்.
 
இந்நிலையில் தெலுங்கு மெகா ஸ்டாரின் மகனின் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட அழைத்திருக்கிறார்கள். இதுபோன்ற ஒரு பாடல் குத்துப்பணியை அவர் ஏற்கனவே செய்திருக்கிறார். இந்தமுறை அவர் கேட்டது ஒன்றரை கோடி. 
 
இந்த பட்ஜெட்டில் சின்னதா ஒரு படம் எடுக்கலாம். பட், அவர் டிமாண்ட் செய்தது தெலுங்கு தேசத்தில். யோசிச்சு சொல்றோம் என்று வெயிட்டிங்கில் வைத்திருக்கிறார்கள் நடிகையை.