செவ்வாய், 19 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: வியாழன், 15 ஜூன் 2017 (12:41 IST)

நடிகை கஸ்தூரிக்கும், டிஆர் பாலுவுக்கும் தொடர்பு: டுவிட்டரில் கிசுகிசு!

நடிகை கஸ்தூரிக்கும், டிஆர் பாலுவுக்கும் தொடர்பு: டுவிட்டரில் கிசுகிசு!

நடிகை கஸ்தூரி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கும் தொழில் அதிபர் லட்சுமி மிட்டலுக்கும், டி.ஆர்.பாலுவுக்கும் இடையே ஒரே ஒரு தொடர்பு இருப்பதாக கூறி பதிவிட்டிருந்தார். முடிந்தால் இந்த கிசுகிசுவை கண்டுபிடியுங்கள் எனவும் கூறியிருந்தார்.


 
 
நடிகை கஸ்தூரி சமீப காலமாக டுவிட்டரில் கருத்துக்கள் கூறிவருகிறார். சமீபத்தில் மாட்டிறைச்சி தொடர்பாக அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. கஸ்தூரியின் கருத்துக்கு பாராட்டுக்களும் வருகின்றன. அதே நேரத்தில் விமர்சனங்களும் வருகின்றன.
 
இந்நிலையில் நேற்று நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை கஸ்தூரிக்கும் பெரும்பணக்காரர் தொழிலதிபர் லட்சுமி மிட்டலுக்கும் என்ன தொடர்பு? கிசுகிசு என பதிவிட்டிருந்தார். மற்றொரு டுவிட்டில், அதே தொடர்பு திரு TR பாலுவிற்கும் கஸ்தூரிக்கும் உண்டு. கிசுகிசு 2 கண்டுபிடிங்க என கூறியிருந்தார்.
 
அதாவது நடிகை கஸ்தூரி, தொழில் அதிபர் லட்சுமி மிட்டல், திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு ஆகிய மூவரின் பிறந்த நாள் இன்று. இதனை தொடர்புபடுத்தியே நடிகை கஸ்தூரி இந்த பதிவியை செய்துள்ளார் என்பது பின்னர் தெரியவந்தது.