போதைப்பொருள் விவகாரம்… டோலிவுட்டைத் தொடர்ந்து சிக்கும் கோலிவுட்?


Cauveri Manickam (Suga)| Last Updated: சனி, 5 ஆகஸ்ட் 2017 (20:30 IST)
டோலிவுட்டைத் தொடர்ந்து கோலிவுட்டிலும் போதை மருந்து சோதனை நடக்கலாம் என்கிறார்கள்.

 
 
அக்கட பூமியில் சில மாதங்களாக போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. டோலிவுட் நட்சத்திரங்கள் பலர் போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும், இதற்காக வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அதைத் தொடர்ந்து பல பிரபலங்கள் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. காஜல் அகர்வாலின் மேனேஜரான ரோனி கூட இந்த விஷயத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
இந்த நிலையில், டோலிவுட்டைப் போலவே கோலிவுட் நட்சத்திரங்கள் மீதும் போதைப்பொருள் பயன்படுத்துவதாகப் புகார் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, விரைவில் கோலிவுட்டிலும் சோதனை நடைபெறலாம் என்கிறார்கள்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :