நிர்வாணத்திற்கு என்றே ஒரு அப்ளிகேசனா? பிரபல நடிகைக்கு தடை போட்ட கூகுள்


sivalingam| Last Modified செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (23:13 IST)
பிரபல நடிகை பூனம் பாண்டேவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்தியா கோப்பையை வென்றால் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் என்று போல்டாக தெரிவித்தவர் இந்த நடிகை. அதுமட்டுமின்றி அவ்வப்போது தனது டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய பக்கங்களில் அரை நிர்வாணம், முழு நிர்வாண படங்களை பதிவு செய்து இளைஞர்களை சூடேற்றி கொண்டிருந்தார்


 


இந்த நிலையில் பூனம் பாண்டே தனக்கென ஒரு மொபைல் அப்ளிகேசனை ஆரம்பிக்க முடிவு செய்து அதற்கான பணியை “ராஸ்ர் கார்ப் மற்றும் மை ஏஜென்சியிடம் ஒப்படைத்தார். அவர்களும் பூனம் விரும்பியபடியே ஒரு மொபைல் அப்ளிகேசனை தயார் செய்து கொடுத்தனர்.

இந்த ஆப் குறித்து பூனம் பாண்டே கூறியபோது, 'இந்த அப்ளிகேஷனில் என்னை பற்றிய அனைத்து தகவல்களும் கிடைக்கும். என்னைப் போலவே என்னுடைய அப்ளிகேசனும் போல்டாக இருக்கும். எனவே நான் என்னென்ன விரும்புகிறேனோ, அவற்றை எல்லாம் என் அப்ளிகேசனில் நான் போஸ்ட் செய்வேன்' என்று மறைமுகமாக நிர்வாண படங்களையும் போஸ்ட் செய்வது குறித்து கூறியிருந்தார்

நேற்று தான் இந்த அப்ளிகேசன் வெளியானது. ஆனால்  ஒருசில நிமிடங்களில் கூகுள் நிறுவனம் தடை செய்தது. பூனம் பாண்டேவின் சர்ச்சைக் கருத்துக்கள், நிர்வாண போஸ்ட்டுகள் ஆகியவையே தடைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :