10 லட்சம் கொடுத்து ஆசை காட்டிய பிக்பாஸ்; ஏற்க மறுத்த போட்டியாளர்கள்

Sasikala| Last Updated: வியாழன், 28 செப்டம்பர் 2017 (10:37 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கொண்டது. தற்போது இறுதி 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மக்களிடையே மிகுந்த  எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கின்றார்.

 
தமிழ் பிக் பாஸ் போட்டியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒவ்வொரு வாரமும் மக்கள்  வாக்களித்து பிக்பாஸ் வீட்டில் இருக்க வாய்ப்பு கொடுக்கலாம். மிகவும் பரபரப்புடன் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்  இறுதிப் போட்டிக்கு 5 மட்டுமே உள்ள நிலையில், வெற்றியை பெறப்போவது யார் என்ற ஆர்வம் பார்வையாளர்களிடையே  எழுந்துள்ளது.
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று போட்டியாளர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 10 லட்சம் ருபாய் கொடுக்கப்படும்,  அதை எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்தும் பிக்பாஸ் வீட்டில் இருந்தும் வெளியேறிவிடவேண்டும் என கூறப்பட்டது. பிறகு  11 லட்சம் தந்து அந்த பணத்தை எடுத்துகொண்டு வெளியேறலாம் என கூறப்பட்டது. போட்டியாளர் அனைவரும் 100 நாட்கள்  வரை பிக்பாஸ் வீட்டில் இருக்கவே விரும்பினர். 
 
பிக்பாஸ் வெற்றியாளருக்கு 50 லட்சம் பரிசு தொகையில் இந்த 10 லட்சம் கழிக்கப்படும் என்றும் தெரிவித்தார் பிக்பாஸ். ஆனால்  இந்த 10 லட்சத்தை யாரும் எடுக்கவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :