ஓவியத்தை பரிசளித்த நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த விஜய்!

Sasikala| Last Updated: சனி, 18 மார்ச் 2017 (10:50 IST)
சிங்கம்-3 படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி ஒன்று சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டார் நடிகர் சூர்யா.அப்போது அவரை சந்தித்த மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர், நடிகர் விஜயின் ஓவியம் ஒன்றை  சூர்யாவிடம் அளித்து, அதனை எப்படியாவது விஜயிடம் சேர்த்து விடும்படி கேட்டு கொண்டார். இதனால் சூர்யா அந்த விஜய் ரசிகரின் வேண்டுகோளை ஏற்று அதனை விஜயிடம் ஒப்படைப்பதாக உறுதி கொடுத்தார்.
 
இந்நிலையில் இயக்குநர் ராஜ் சேகர பாண்டியன், சூர்யா சார்பில் அந்த பரிசை நடிகர் விஜயிடம் வழங்கியுள்ளார். அந்த பரிசை பெற்றுக் கொண்ட விஜய், சூர்யாவுக்கு தனது நன்றியை தெரிவித்தார் என ராஜ் சேகர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :