வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 26 மே 2016 (18:00 IST)

பேய் படத்துக்காக லண்டன் பறக்கும் த்ரிஷா

பேய் படத்துக்காக லண்டன் பறக்கும் த்ரிஷா

திகல் கலந்த பேய் படத்தில் நடிப்பதற்காக விரைவில் த்ரிஷா லண்டன் செல்கிறார்.


 
 
த்ரிஷா நடித்துள்ள ஹாரர் காமெடிப் படம் நாயகி முடிவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து மீண்டுமொரு திகில் படத்தில் த்ரிஷா நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை மாதேஷ் இயக்குகிறார்.
 
இதன் படப்பிடிப்புக்காக த்ரிஷாவும் படக்குழுவும் விரைவில் லண்டன் செல்லவுள்ளது. இந்த படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைக்க இருக்கின்றனர். மேலும் இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் பட்டியலை விரைவில் வெளியிட இருக்கின்றனர்.
 
தனுஷுடன் த்ரிஷா நடித்துள்ள கொடி படம் விரைவில் வெளியாகவுள்ளது. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் த்ரிஷா அரசியல்வாதியாக நடித்துள்ளார்.