Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நாயகி மையப்படங்களின் நாயகனான ஜிப்ரான்


Abimukatheesh| Last Updated: திங்கள், 9 ஜனவரி 2017 (18:10 IST)
ஜிப்ரான் இரண்டு படங்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைத்து வருகிறார். ஒன்று மகளிர் மட்டும், இன்னொன்று அறம்.

 

 
மகளிர் மட்டும் படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். நாயகி மையப்படமான இது பெண்கள் பிரச்சனையை பிரதானமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. சூர்யா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது.
 
அறம் படத்தின் நாயகி நயன்தாரா. அவர் கலெக்டராக நடிக்கும் இந்தப் படமும் நாயகி மையப்படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கதைக்கும், பின்னணி இசைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். 
 
இப்படங்களைத் தொடர்ந்து வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் இசையமைப்பாளராகவும் ஜிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :