Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜூலிக்கு விஜே வாய்ப்பு கிடைத்தது எப்படி??


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 9 நவம்பர் 2017 (18:26 IST)
பிக்பாஸ் போட்டியாளரான ஜூலி தற்போது கலைஞர் டிவி நடன நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளாராக பணியாற்ற உள்ளார். 

 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கேலி, கிண்டலுக்கு ஆளான ஜூலி இவை அனைத்தையும் கண்டு கலங்காமல் போராட துணிந்தார். 
 
பல முயற்சிகளுக்கு பின்னர் தற்போது ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் தொகுப்பாளராகி விட்டார். இந்நிகழ்ச்சியை இதற்கு முன்னர் தொகுத்து வழங்கி வந்தவர் சஞ்சீவ்.
 
சஞ்சீவிற்கு ஓய்வு தேவைப்பட்டதால், இந்த நிகழ்ச்சிக்கு வேறு புதிய தொகுப்பாளரை தேடியுள்ளனர். அப்போது ஜூலி ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகவேண்டும் என்ற ஆசையை சொல்லியிருந்ததை நினைவில் வைத்து அவருக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறார் கலா மாஸ்டர்.
 
ஆனால், காயத்ரி மாஸ்டரும் கலா மாஸ்டரும் உறவினர்கள் என்பதாலும், காயத்ரியுடன் பிக்பாஸ் வீட்டில் ஜூலி நெருக்கி பழகிய காரணத்தினாலும் கூட இந்த வாய்ப்பு கிடைத்திருக்கும் என பேசப்படுகிறது.
 
மேலும் செட்டில் ஜூலியின் மனது புண்படும் படி யாரும் பேசக்கூடாது என ரூல்ஸ் போட்டுள்ளாராம் கலா மாஸ்டர்.


இதில் மேலும் படிக்கவும் :