சின்ன பிக்பாஸ் ஆக மாறிய காயத்ரி! வீட்டை விட்டு வெளியேறிய ஜூலி


sivalingam| Last Modified வெள்ளி, 28 ஜூலை 2017 (00:54 IST)
பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்கள் வரை அனைவராலும் வெறுக்கப்பட்ட காயத்ரியை விஜய் டிவி நிர்வாகத்தினர்களும், பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் அவர் நல்லவர் என்று காண்பிக்க பகீரத முயற்சி செய்து வருகின்றனர். 
 

 
 
 
இந்த நிலையில் காயத்ரிக்கு இன்று சின்ன பிக்பாஸ் என்ற பட்டத்தை பிக்பாஸ் வழங்கியுள்ளார். காயத்ரிக்கு மட்டும் இந்த பதவி கொடுத்தால் சந்தேகம் எழும் என்பதால் ஆரவ்வுக்கும் இந்த பதவி சேர்த்து கொடுக்கப்பட்டது.
 
இந்த நிலையில் இன்றைய டாஸ்க் ஆக, வீட்டை விட்டு வெளியேறும் நபர் யார்? என்பதை தேர்வு செய்து அவர் வீட்டின் லைட்டுகள் அணைக்கும் வரை வீட்டைவிட்டு வெளியே இருக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே ஜூலி இதற்கு தேர்வு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று ஜூலி கடும் ஆத்திரத்துடன் வெளியேறினார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :