வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 17 நவம்பர் 2016 (16:11 IST)

தனுஷிடம் நடிக்க வாய்ப்பு கேட்கும் கவுதமி!!

கமலுடன் லிவிங் டு கெதர் உறவை மகள் சுப்புலட்சுமியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முடித்துக்கொண்டார் கவுதமி.


 
 
சுப்புலட்சுமிக்கும ஹீரோயின் ஆசை வந்திருக்கிறது. அதை கவுதமியிடம் தெரிவித்தபோது அவரும் சம்மதித்தார். மகளை பெரிய ஸ்டார் அல்லது பெரிய இயக்குனர் படங்களில் அறிமுகப்படுத்த முடிவு செய்திருக்கிறார். 
 
தனுஷ், கமல் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் 2வது மகள் அக்‌ஷராவுடன் ஜோடிபோட்டு நடித்தார். 
 
கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் தனுஷ் ஜோடியாக சுப்புலட்சுமி நடிப்பது பொருத்தமாக இருக்கும் என கவுதமி கருதுவதால் அவரிடம் மகளுக்காக வாய்ப்பு கேட்டு பேச்சு நடத்துகிறாராம். 
 
அதே சமயம் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிப்பதற்கும் வாய்ப்பு எதிர்பார்ப்பதுடன் தனக்கு தெரிந்த பெரிய இயக்குனர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் கவுதமி.