Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அம்மா வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றிய ஓ.பி.எஸ்: கவுதமி பாராட்டு


Abimukatheesh| Last Updated: புதன், 8 பிப்ரவரி 2017 (17:50 IST)
அம்மா தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை ஓ.பன்னீர்செல்வம் காப்பாற்றி உள்ளார் என நடிகை கவுதமி பாராட்டு தெரிவித்து உள்ளார்.

 


நேற்று இரவு முதல் தமிழக முதலவர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா எதிராக திரும்பியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே இரவில் அனைவராலும் வெறுக்கப்பட்ட ஒருவர், ஹீரோவாக மாறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஓ.பன்னீர்செல்வத்தை கேலி செய்ததற்கு மன்னிப்பு கேட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நடிகை ஓ.பி.எஸ். பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில்,

இதற்காகத்தான் அம்மா ஓ.பி.எஸ்.-ஐ தேர்ந்தெடுத்தார். தன் அம்மா தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றினார்.


இதில் மேலும் படிக்கவும் :