Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இனிமேல் சினிமாவில் பாடமாட்டேன் - கானா பாலா அதிரடி அறிவிப்பு


Murugan| Last Modified புதன், 14 ஜூன் 2017 (17:13 IST)
சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ள பிரபல பாடகர் கானா பாலா, இனிமேல் தான் சினிமாவில் பாடமாட்டேன் என அறிவித்துள்ளார்.

 

 
அட்டகத்தி படத்தில் இடம் பெறும்  ‘ஆடி போனா ஆவணி’ மற்றும் ‘நடுக்கடலுல கப்பலை இறங்கி’ ஆகிய பாடல்களை பாடி தமிழ் சினிமாவில் நுழைந்தவர் பாடகர் கானா பாலா. இந்த படம் மூலம் அவர் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானார்.
 
அதைத் தொடர்ந்து, அவர் தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடினார். இந்த நிலையில், சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் விதமாக, சென்னை மாநகர போலீசார் ஒரு விழிப்புணர்வு பாடலை நேற்று வெளியிட்டனர். இந்த பாடலை கானா பாலா எழுதி பாடியுள்ளார். 
 
அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய கானா பாலா “இனிமேல் நான் சினிமாவில் பாடுவதில்லை என முடிவெடுத்துவிட்டேன். மக்களுக்கு நன்மை தரும் விஷயங்களை மட்டுமே நான் பாடுவேன். அதையும் இலவசமாக பாடி கொடுப்பேன்” என அவர் கூறியிருக்கிறார்.
 
கானா பாலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார் என்பது பலருக்கும் தெரியாது.


இதில் மேலும் படிக்கவும் :