புதன், 11 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 11 டிசம்பர் 2024 (07:51 IST)

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ பட அப்டேட் கொடுத்து ரசிகர்களை குஷியாக்கிய ஜி வி பிரகாஷ்!

சமீபகாலமாக ஒவ்வொரு படத்துக்கும் இடையே இடைவெளி எடுத்துக்கொண்ட அஜித் தற்போது ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  இதில் விடாமுயற்சி ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் குட் பேட் அக்லி ஷுட்டிங் இரண்டு கட்டங்கள் நடந்து முடிந்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆன தேவி ஸ்ரீ பிரசாத் திடீரென நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஜி வி பிரகாஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஜி வி பிரகாஷிடம் ‘குட் பேட் அக்லி’ எப்படி போயிட்டிருக்கு? எனக் கேட்க அதற்கு ஜி வி பிரகாஷ் “ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் celebration of life இசைக்கு ஒரு நடனக் காட்சியைப் படமாக்கினால் எப்படி இருக்கும்?.. நல்லா இருக்கும்ல” எனக் கூறியுள்ளார்.