ஜிவி பிரகாஷ் கழுத்தில் ருத்திராட்சம்+சிலுவை இருப்பது ஏன்?

Last Modified புதன், 29 நவம்பர் 2017 (18:42 IST)
கோலிவுட் திரையுலகின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். ஒரே நேரத்தில் அதிக படங்களில் நடித்து கொண்டும் இசையமைத்து கொண்டும் இருக்கும் இவர் பிசியான நட்சத்திரமாக உள்ளார்

இந்த நிலையில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. சர்வம் தாளமயம்' என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதை அடுத்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் ஜி.வி.பிரகாஷின் கழுத்தில் ருத்திராட்சம் மற்றும் சிலுவை இரண்டுமே உள்ளது என்பதால் பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படம் இசை சம்பந்தப்பட்ட படம் என்பதும் இந்த படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :