வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 28 ஜனவரி 2015 (14:04 IST)

கிருமியில் பாடிய ஜீ.வி.பிரகாஷ், கானா பாலா

ஆஸ்ட்ரேலியாவில் சினிமா தொழில்நுட்பம் படித்த அனுசரண் இயக்கியிருக்கும் முதல்படம், கிருமி. படத்தின் பெயரைப் பார்த்து சந்தேகிக்க வேண்டாம். ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் விபரீத சம்பவங்கள்தான் இதன் கதை.
மதயானை கூட்டம் படத்தில் நடித்த கதிர் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இனிது இனிது படத்தில் அறிமுகமான ரேஷ்மி மேனன் நாயகி. அறிமுகமானபோது வெறும் ரேஷ்மியாக இருந்தவர் இப்போது மேனனையும் சேர்த்துள்ளார். இந்தப் படத்தில் ரேஷ்மியின் கொஞ்சும் தமிழை ரசிகர்கள் கேட்கலாம். ஆம், படத்தில் அவரே டப்பிங் பேசியுள்ளார்.
 
இந்தப் படத்துக்கு இசை, கே. ஜீ.வி.பிரகாஷ், கானா பாலா இருவரும் தலா ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். விரைவில் படம் திரைக்கு வருகிறது.