வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 20 ஜனவரி 2016 (14:57 IST)

ஜீ.வி. நடிக்கும் எனக்கு இன்னொரு பேர் இருக்கு

டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் மீண்டும் ஜீ.வி.பிரகாஷை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு, எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்று வைத்துள்ளனர்.


 
 
ரஜினியின் பாட்ஷா படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற வசனம், எனக்கு இன்னொரு பேர் இருக்கு. தன்னுடன் மோதுகிறவர்களிடம் மாணிக்கமான ஆட்டோ டிரைவர் ரஜினி சொல்லும் இந்த வசனத்துக்கு திரையரங்குகளில் அப்ளாஸ் அள்ளியது. ரஜினியின் புகழ்பெற்ற வசனம் என்பதால் ஜீ.வி.பிரகாஷும், சாம் ஆண்டனும் ரஜினியை சந்தித்து அவரிடம் இது குறித்து பேசி அவரது சம்மதத்தை வாங்கினர்.
 
இந்தப் படத்தில் ஜீ.வி.யின் கதாபாத்திரம் ரஜினியின் ஜானி பட கதாபாத்திரத்தின் இன்ஸ்பிரேஷனில் உருவாக்கப்பட்டுள்ளது.