“பிறந்ததில் இருந்தே டான்ஸ் ஆடுவேன்” - பிரபுதேவா

CM| Last Modified சனி, 13 ஜனவரி 2018 (12:15 IST)
‘பிறந்ததில் இருந்தே நான் டான்ஸ் ஆடுவேன்’ என பிரபுதேவா தெரிவித்துள்ளார்.
கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் நேற்று ரிலீஸான படம் ‘குலேபகாவலி’. ஹன்சிகா மோத்வானி ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில்,  ரேவதி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், ‘மொட்டை’ ராஜேந்திரன், ஆனந்தராஜ், மதுசூதன் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். விவேக் - மெர்வின் இருவரும்  இசையமைத்துள்ளனர்.
 
இந்தப் படத்தின் புரமோஷனுக்காக, ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார் பிரபுதேவா. ‘விரைவில் தமிழில் படம் இயக்குவேன்’ என்று தெரிவித்துள்ள பிரபுதேவா, ‘விஜய் எப்போதுமே மாஸ் & கிளாஸ்’ எனப் பதிலளித்துள்ளார்.
 
‘நீங்கள் எத்தனை வயதில் இருந்து நடனமாடுகிறீர்கள்?’ என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள பிரபுதேவா, ‘ஆன் ஸ்கிரீனில் 16 வயது, ஸ்கிரீனுக்குப் பின்னால் பிறந்ததில் இருந்தே டான்ஸ் ஆடுவேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :