Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விக்ரமுக்கு வில்லன் பார்த்திபன்?

Sasikala| Last Modified சனி, 11 பிப்ரவரி 2017 (15:07 IST)
விக்ரம் நடிக்கும் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க பார்த்திபனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

 
விக்ரம் தற்போது கௌதமின் துருவநட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார். விக்ரமுக்கும், கௌதமுக்கும் சம்பள விஷயத்தில்  தகராறு, விக்ரம் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று வதந்திகள் வரும் நிலையில், நேர்மறையான சில  விஷயங்களும் நடந்துள்ளன.
 
இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் பிருத்விராஜிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக முதலில் கூறப்பட்டது.  தற்போது பார்த்திபனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
 
இன்னும் ஓரிரு நாளில் துருவநட்சத்திரத்தின் வில்லன் யார் என்பது தெரிந்துவிடும்.


இதில் மேலும் படிக்கவும் :