வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2016 (14:19 IST)

வடசென்னைக்காக படமாகும் ப்ரீயட் காட்சிகள்

வடசென்னைக்காக படமாகும் ப்ரீயட் காட்சிகள்

வெற்றிமாறனின் கனவுப்படமான வடசென்னை ஒருவழியாக டேக் ஆஃப் ஆகியிருக்கிறது. தனுஷின் வுண்டர்பாரும், லைக்காவும் இணைந்து படத்தை தயாரிக்கின்றன.


 


சுமார் 40 வருடங்களின் பின்னணியில் நடக்கும் கதை என்பதால் மூன்று பாகங்களாக வெற்றிமாறன் படத்தை உருவாக்குகிறார்.
 
முதல்கட்டமாக மத்திய சிறைச்சாலை அரங்கத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. 1977 -இல் நடைபெறுவது போன்ற காட்சிகளை இங்கு படமாக்கி வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தனுஷுடன் சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, விஜய் சேதுபதி நடிக்கின்றனர்.
 
வடசென்னையில் நடித்துக் கொண்டே, பிற படங்களை முடித்துக் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார் தனுஷ்.