Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விவேகம் படக்குழுவினருக்கு இதை செய்து அசத்திய அஜித்!

Sasikala| Last Modified திங்கள், 15 மே 2017 (10:54 IST)
தல அஜித்தின் விவேகம் டீஸர் வெளியான 45 நிமிடங்களில் 1 லட்சம் லைக்ஸ் பெற்று தென்னிந்தியாவில் முதலிடம் பெற்றது. மேலும் 12 மணி நேரத்தில் 5 மில்லியன் பேர் இந்த டீசரை பார்த்ததாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

 
இந்நிலையில் டீஸர் வெளியாகி மூன்றாவது நாளில் 1 கோடி வியூஸ் என்ற மைல்கல்லை தாண்டியுள்ளது. அஜித்தின்  விவேகம் படம் தான் இப்போது தமிழ் சினிமா ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பே. விவேகம் டீஸர் தென்னிந்திய சினிமாவிலேயே அதிகம் பார்வையாளர்களை கொண்ட டீஸர் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.
 
அஜித்துக்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு. தான் நடிக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் தன் கையாலேயே சமையல்  செய்து போட்டு அசத்துவார். அதேபோல் இந்த முறை விவேகம் படக்குழுவினருக்கும் சமையல் செய்து போட்டிருப்பதாக  தெரிகிறது. செஃப் உடையில் அஜித் இருப்பது போல் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :