வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வெள்ளி, 9 மார்ச் 2018 (11:51 IST)

மலையாளப் படங்களுக்கான கேரள அரசு விருது அறிவிப்பு

கடந்த வருடம் வெளியான மலையாளப் படங்களுக்கான விருதை அறிவித்துள்ளது கேரள அரசு. 
2017ஆம் ஆண்டில் வெளியான மலையாளப் படங்களுக்கான மாநில அரசு விருதை அறிவித்துள்ளது கேரளா. ‘ஒட்டமுரி வெளிச்சம்’ சிறந்த படத்துக்கான விருதையும், ‘ஈடன்’ இரண்டாவது சிறந்த படத்துக்கான விருதையும், ‘ரக்‌ஷதிகரி பைஜு ஒப்பு’ சிறந்த வெகுஜன படத்துக்கான விருதையும், இந்திரன்ஸ்  (ஆளோருக்கம்) சிறந்த நடிகருக்கான விருதையும், பார்வதி (டேக் ஆப்) சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளனர்.
 
சிறந்த துணை நடிகருக்கான விருதை அலஞ்சியர் லேவும் (தொண்டிமுதலும் ட்ரிக்சக்‌ஷியும்), சிறந்த துணை நடிகைக்கான விருதை பாலி வல்சனும் (இ மே  யவ்), சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான விருதை மாஸ்டர் அபிநந்த் மற்றும் நக்ஷத்ராவும், சிறந்த இயக்குநருக்கான விருதை லியோ ஜோஸ் பள்ளிச்சேரியும்  (இ மே யவ்), சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை மகேஷ் நாராயணனும் (டேக் ஆப்) பெற்றுள்ளனர்.
 
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை மனிஷ் மாதவனும் (ஈடன்), சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதை ஷகபாஸ் அமனும் (மாயநதி), சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதை சிதரா கிருஷ்ணகுமாரும் (வனமகளுள்ளவோ மற்றும் விமனம்), சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பிரபா வர்மாவும் (க்ளையன்ஸ்), சிறந்த பின்னணி இசைக்கான விருதை கோபி சுந்தரும் (டேக் ஆப்) பெற்றுள்ளனர்.
 
சிறந்த கதைக்கான விருதை சஞ்சீவ் பழூரும் (தொண்டிமுதலும் ட்ரிக்சக்‌ஷியும்), சிறந்த தழுவல் கதைக்கான விருதை எஸ்.ஹரிஷ் மற்றும் சஞ்சு சுரேந்திரனும் (ஈடன்), சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை எம்.கே.அர்ஜுனனும் (பயணகம்) பெற்றுள்ளனர்.