வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 22 நவம்பர் 2014 (14:10 IST)

ரெண்டாவது படத்தின் லாஸ்ட் லுக் - பில்டப்பெல்லாம் ஓகே, பட் பேஸ்மெண்ட்...

தமிழ்ப்படத்தை எடுத்த சி.எஸ்.அமுதனின் இரண்டாவது படம், ரெண்டாவது படம். தனது இரண்டாவது படத்துக்கு ரெண்டாவது படம் என்றே பெயர் வைத்தார்.
விமல், ரிச்சர்ட், அரவிந்த் ஆகாஷ் ஆகியோருடன் விஜயலட்சுமி, ரம்யா நம்பீஸன் நடித்தனர். விஜயலட்சுமி தனது உடலுக்கு பொருந்தாத கவர்ச்சியுடன் பல காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். 
 
படம் தயாரான உடன் வெளியாகியிருந்தால் இந்நேரம் அமுதன் அஞ்சாவது படம் செய்து கொண்டிருப்பார். விதி வலியது. படம் இன்னும் வெளியாகவில்லை.
 
இந்நிலையில் லாஸ்ட் லுக் ட்ரெய்லர் என்ற பெயரில் ஒரு ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். எல்லோரும் பர்ஸ்ட் லுக் ட்ரெய்லர்தானே வெளியிடுறாங்க, நாங்க போடுறோம் பாரு லாஸ்ட் லுக் ட்ரெய்லர் என்று வெளியிட்டிருக்கிறார்கள். இதற்கு மேல் ட்ரெய்லர் வெளியிட்டு வதைக்க மாட்டோம், படம் அடுத்த மாதம் வெளியாகிறது என்ற மறைபொருள் ஒன்றும் இந்த லாஸ்ட் லுக்கிற்கு பின்னால் உண்டு.
 
பில்டப்பெல்லாம் நல்லாதான் இருக்கு, பேஸ்மெண்டும் அப்படி இருந்தால் நல்லது.