நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு மும்பையில் இன்று இறுதிச்சடங்கு

funeral
Last Updated: புதன், 28 பிப்ரவரி 2018 (07:11 IST)
துபாயில் மரணடைந்த நடிகை ஸ்ரீதேவியின்  உடல் அனில் அம்பானியின், தனி விமானம் மூலம் மும்பை வந்தது. மும்பை விமான நிலையத்திலிருந்து, அந்தேரியில் உள்ள இல்லத்திற்கு ஸ்ரீதேவி உடல் கொண்டு செல்லப்பட்டது.

ஸ்ரீதேவியின் இல்லத்தில் அவருடைய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் விஐபிக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
பொதுமக்களின் அஞ்சலிக்காக ஸ்ரீதேவியின் உடல், மும்பை ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இன்று காலை 9.30 மணி முதல்12.30 மணி வரை வைக்கப்படவுள்ளதாகவும், பின்னர் பிற்பகல் 2 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கி மாலை 3.30 மணிக்கு வில்லிபார்லியில் உடல் தகனம் செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகுயுள்ளது.
 
ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த மும்பை ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு லட்சக்கணக்கானோர் வருகை தர வாய்ப்பு இருப்பதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :