வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: சனி, 28 மே 2016 (18:40 IST)

ஹைதராபாத்தில் 18–ந்தேதி பிலிம்பேர் விருது விழா

தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழா வருகிற 18–ந்தேதி ஹைதராபாத்தில் நடக்கிறது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழி படங்களுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த போட்டியில் 200–க்கும் அதிகமான தென்னிந்திய மொழி படங்கள் பங்கேற்கின்றன.


 

 
தென்னிந்திய படங்களுக்கான பிலிம்பேர் விருதுகள் வழங்கும் முதல் விழா 1966–ம் வருடம் சென்னையில் உள்ள கலைவாணர் கலை அரங்கில் நடந்தது. இதில் தமிழ், தெலுங்கு மட்டும் பங்கேற்றன. 1969–ல்தான் இந்தப் போட்டியில் மலையாளம், கன்னட படங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டன.
 
தமிழில் சிறந்த படங்களுக்கான போட்டியில் காக்கா முட்டை, விசாரணை போன்ற படங்கள் உள்ளன. இதுபோல் நடிகர்கள், நடிகைகள், துணை நடிகர்–நடிகைகள், நகைச்சுவை நடிகர்கள் ஆகியோரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
 
சிறந்த இயக்குனர்கள், கேமராமேன், இசை அமைப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் 4 தென்னிந்திய மொழி படங்களில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளனர். சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு ஜூன் 18–ந்தேதி ஐதராபாத்தில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன.