வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 27 மே 2016 (10:42 IST)

சண்டைக்காட்சியில் விபத்து - மருத்துவமனையில் விஷால்

சண்டைக்காட்சியில் விபத்து - மருத்துவமனையில் விஷால்

கத்திச்சண்டை படத்தின் சண்டைக் காட்சியில் நடித்த விஷாலுக்கு தோள்பட்டையில் அடிபட்டதால் அவர் சென்னையிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


 
 
நடிகர் சங்கம், திருட்டு டிவிடி என்று இரண்டுபுறம் சிலம்பாட்டம் நடத்திக் கொண்டே நடிக்கவும் செய்கிறார் விஷால். தற்போது சுராஜ் இயக்கும் கத்திச்சண்டை படத்தில் அவர் நடித்து வருகிறார். நேற்று சண்டைக் காட்சியை படமாக்கிய போது, எதிர்பாராமல் விழுந்த அடியில் விஷாலின் தோள்பட்டை மூட்டு விலகியதாக கூறப்படுகிறது. வலியால் துடித்த அவரை அள்ளிக் கொண்டு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.
 
அடிபலமாக விழுந்திருப்பதால் சில நாள்கள் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர். 
 
பொறுப்புக்கு வந்தா இப்படி ஏதாவது விபத்து ஏற்பட்டு ஓய்வு எடுத்தால்தான் உண்டு.