தந்தையின் அரசியலுக்கு ஆதரவு இல்லை; கவுதம் கார்த்திக் அதிரடி பேச்சு

Sasikala| Last Modified திங்கள், 26 ஜூன் 2017 (13:09 IST)
நடிகர் கவுதம் கார்த்திக் “இவன் தந்திரன்“ படத்தின் டிரைலர், பாடல்கள் மற்றும் ரசிகர்கள் சந்திப்பு தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இப்படம் வருகிற 30ஆம் தேதி வெளியாகிறது.

 
 
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கவுதம் கார்த்திக் பேசுகையில், என்ஜினீயரிங் படித்த மாணவர்களின் கதை தான்  “இவன் தந்திரன்”. என்னுடன் நடிகர் ஆர்.ஜே.பாலாஜியும் நடித்துள்ளார். காதல், காமெடி என எல்லோரும் பார்க்கும்படியாக படம் இருக்கும். மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வாகவும் இருக்கும்.
 
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி கருத்து கூற விரும்பவில்லை. என் தந்தை அரசியலில் இருந்தாலும், அவருடைய அரசியலுக்கு ஆதரவு தரமாட்டேன். பாகுபலி போன்ற தரமான படங்கள் வந்தால் பொதுமக்கள் ஆதரவு எப்போதும் இருக்கும். 
 
இயக்குனர் கண்ணன், நான் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு போன்று வருவேன் என கூறுகிறார். அதற்காக நான் கடுமையாக உழைப்பேன். மேலும் ரங்கூன் படம் போன்று இந்த படமும் வெற்றியடையும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :