Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாகுபலியின் வளர்ப்பு தந்தை; பெண் கொடுத்த புகாரின் பேரில் கைது

Sasikala| Last Modified திங்கள், 13 நவம்பர் 2017 (16:35 IST)
உலக சினிமாவில் முத்திரை பதித்த படம் பாகுபலி. இப்படத்தின் ஒவ்வொரு கேரக்டர்களும் மனதில் நிற்கும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பிரபாஸின் வளர்ப்பு தந்தையாக நடித்தவர் வேங்கடேச பிரசாத்.

 
ஹைதாரபாத்திலுள்ள பிரபல மல்டிபிளக்ஸ் திரையரங்கமான ஐமாக்ஸில் மேனேஜராக பணியாற்றி வருகிறார் வேங்கடேச பிரசாத். அங்கு வேலைசெய்யும் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக, இவர் தற்போது அப்பெண் அளித்த புகாரால் கைது  செய்யப்பட்டுள்ளார். போலிஸாரின் விசாரணையில், அப்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ள கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தற்போது வேறு ஒரு பெண்ணுடன் இதே போல தொடர்பு வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
மேலும் கடந்த 7 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக பாலியல் ரீதியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 7 வருடங்களாக அப்பெண்ணுடன் பழகியதில், அப்பெண் இருமுறை கருவுற்றிருந்தாராம். இதனால் பிரசாத் அப்பெண்ணை இருமுறையும் அக்கருவை கலைக்க சொல்லி மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கைது அவர் கைது செய்யப்பட்டதோடு  அவர் தீவிர விசாரணையில் இருப்பதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :