Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினி அரசியலுக்கு வர தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 30 ஜூலை 2017 (13:51 IST)
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து தமிழகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என அவரது ரசிகர்கள் பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்தனர்.

 

 
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர போவதாகவும், அதற்காக அவர் தனி கட்சி தொடங்க போவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதுகுறித்து ரஜினி எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருந்தாலும் இந்த செய்திகளை கொண்டு அரசியல் தலைவர்கள் பலரும் ரஜினியை விமர்சித்தனர். சிலர் வரவேற்றனர்.
 
இந்நிலையில் அவரது ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசையில் உள்ளனர். அதற்காக மேலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் சேர்ந்து பழமுதிர்ச்சோலை முருகனை வேண்டி தங்கத்தேர் இழுத்து நேர்த்திக்கடன் செய்தனர்.
 
இதுகுறித்து அவரகள் கூறியதாவது:-
 
ரஜினிகாந்த் நல்ல நலமுடன் நீண்ட ஆயுளோடு வாழ்ந்து தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும். மதுரை மாவட்டம் கடும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. நல்ல மழை பொழிய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்த நேர்த்திக்கடன் செய்யப்பட்டது என்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :